பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. அக்டோபர் 30–ந்தேதி வரை இவ்விழா நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடக்கிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு மலைக்கோவில் நடை திறக்கப்பட்டு விஷ்வரூப தரிசனமும், 4.30 மணிக்கு விழா பூஜை, படையல் நெய்வேத்தியம் நடக்கிறது.
பிற்பகல் 2.30 மணிக்கு சின்னண குமாரசாமி அசுரர்களை வதம் செய்யும் பொருட்டு மலைக்கொழுந்து அம்மனிடம் வேல்வாங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருஆவினன்குடியில் பராசக்திவேலுக்கு பூஜை செய்யப்பட்டு மாலை 6 மணிக்கு மேல் வடக்கு கிரிவீதியில் தராகாசுரன் வதமும், கிழக்கு கிரி வீதியில் பானுகோபன்சூரன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகாசூரன் வதமும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடக்கிறது.
இரவு 9 மணிக்கு மேல் சாமி மலைகோவிலுக்கு புறப்பாடாகி சம்ப்ரோட்சனம் பூஜைக்கு பின்னர் அர்த்தசாம பூஜை நடக்கிறது. இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
30–ந்தேதி மலைக்கோவிலில் காலை 10 மணிக்கு வள்ளி– தெய்வானை உடனான சண்முகருக்கும், பெரிய நாயகி அம்மன்கோவிலில் இரவு 7 மணிக்கு முத்து குமாரசாமி, வள்ளி– தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
Thanks MaalaiMalar : http://www.maalaimalar.com/2014/10/23092438/kanda-sasti-festival-start-tom.html
0 comments:
Post a Comment